அயோத்தியில் உதித்த பாலகன் ராமன் ¦ Shri Ram Temple in Ayodhya


அயோத்தியில் பாலகன் ராமன்

நீண்ட நெடு பயணமாய் இழந்த 
உன் மனை(வி)யை பெரும் போரை 
எதிர்கொண்டு மீட்டாய் அன்று! 
அதே ராம ஜென்ம பூமியில்
தீமையை அழித்து நல்லருள் பெருக 
கோலூன்றி நின்றாய் இன்று!
 
    நடந்து முடிந்த மங்களகரமான சார்வரி ஆண்டு ஆடி மாதம் 21-ஆம் நாள் (05-08-2020)  துதியை திதியில் சுபயோக சுபதினத்தில் ராமஜென்ம பூமியான உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் மேளதாளங்கள் விண்ணைப் பிழக்க, மந்திர உச்சாடனங்கள் அயோத்தி எங்கும் ஒலிக்க அடிக்கல் நாட்டு விழா இந்துக்களின் கடவுளாம் ராமனுக்கு நடத்தப்பட்டது. 

    இதற்காக 2000 ஆலயங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதமண், 100 நதிகளில் இருந்து கலசங்களில் எடுத்துவரப்பட்ட புனிதநீர் கொண்டு பூஜிக்கப்பட்டது. பாரதப் பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட கல் நிறுவி பூமி பூஜை பிற்பகல் 12:30 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது.

கட்டுமானம்

    ராமருக்கு கட்டவிருக்கும் கோவில் 67 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமாக அமையவுள்ளது. இந்நிலப்பரப்பில் 10 ஏக்கரில் கோவில் கட்டுமானமும் மீதமுள்ள 57 ஏக்கர் நிலப்பரப்பு முழுவதும் கோவில் வளாகமாகவும் அமையவிருக்கிறது.


    இக்கோவில் கட்டுமானம் நகரா என்ற கோவில் கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட உள்ளது. கோவில் கட்டிடம் 161 அடி கொண்ட மூன்றடுக்கு உயரமும், 268 அடி நீலமும், 140 அடி அகலமும் கொண்டு 5 மண்டபங்களும், 360 தூண்களுடன் 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

கட்டிடக் கலைஞர்

    அகமதாபாத்தைச் சார்ந்த சோம்புரா குடும்பம் 15 தலைமுறைகளாக கோவில் கட்டுமான பணியை 131 கோவில்களை (சோமநாதர் கோவில் உற்பட) கட்டிய பெருமைக்குறியது. அயோத்தியில் அமையவுள்ள இக்கோவிலுக்கான கட்டிட மாதிரி 1988-ஆம் ஆண்டே சந்திரகாந்த்பாய் சோம்புரா வடிவமைத்துள்ளார். தற்போது இவருக்கு 77 வயது ஆகிறது இருப்பினும் தந்தை வழிகாட்டுதலில் புதுவடிவம் கொடுத்த இவரது மகன்கள் நிகில் மற்றும் ஆஷிஷ் இருவரும் குழந்தை ராமருக்கான கோவிலை கட்ட உள்ளனர். இதற்காக 30 ஆண்டுகள் சேகரிக்கப்பட்டு வந்த 2 லட்சம் கற்கள் ராமர் கோவில் கட்டுமான பணிக்காக பயன்படுத்தப்படுகிறது. கட்டுமான பணிகள் முழுமை அடைய மூன்றறை வருடங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

வளாகம்

    ராமரின் கோவிலைச் சுற்றியும் லட்சுமணன், கணபதி, அனுமன் மற்றும் சீதை ஆகியோருக்கு கோவில்களும் பக்தர்கள் தியானிக்க தியான மண்டபம் அதற்கு அருகில் ராமரின் புகழ் பாடும் நூல்களை கொண்ட நூலகமும் அமைக்கப்பட உள்ளது.
ராம ஜென்ம பூமி

    விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமன் சரயு ஆற்றின் கரையில் உள்ள கோசல நாட்டின் அரசன் தசரதனின் மூத்த மகனாக பிறந்தார் என இராமாயணம் கூறுகிறது. இங்கு குழந்தை ராமருக்கு கோவில் இருந்ததாகவும் அது மொகலாய அரசர் பாபரின் படைத்தலைவர் இடித்து அதில் மசூதி 1528-ஆம் ஆண்டு எழுப்பியதாகவும் நம்பப்படுகிறது.


    1970,1992 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் தொல்லியல் அகழ்வாராய்வு நடத்தப்பட்டதில் பாபர் மசூதிக்கு கீழும் பக்கவாட்டிலும் முந்தைய காலத்து தொன்மையான கட்டிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டெடுத்துள்ளனர்.

வரலாற்றுப் படிகள்

    ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி விவகாரம் இன்றோ அல்லது நேற்றோ ஏற்பட்ட சர்ச்சை அல்ல இது 90 ஆண்டு கால ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து 70 ஆண்டு கால சுகந்திரம் பெற்ற இந்தியாவில் நிகழ்ந்த தீர்க்கப்படாது தீர்க்கமுடியாது கிடந்த வழக்கு.


1857: பைசாபாத் மாஜிஸ்திரேட்டு முன்பாக பாபர் மசூதியின் மத குரு மவுலவி முகமது அஸ்கார் பாபர் மசூதியின் முற்றத்தை அனுமன் கர்ஹி மகந்த் கைப்பற்றிக்கொண்டதாக தொடுக்கப்பட்டது முதல் வழக்கு.

1859: ஆங்கிலேய அரசு தலையிட்டு இந்து முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை பிரிக்கும் வகையில் ஒரு சுவரை கட்டியது. இந்துக்களுக்கு கிழக்கு வாசலும் முஸ்லீம்களுக்கு வடக்கு வாசலுமாக பிரிக்கப்பட்டது.

1860 -1884: நிலத்தை சட்டவிரோதமாக ஜீயர்களும், சாதுக்களும் ஆக்கிரமித்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணையில் தள்ளுபடி செய்யப்பட்டன.

1885: ராமரின் பிறந்த இடமாக கிழக்கு முற்றத்தில் உள்ள மேடை என்றும் அங்கு கோவில் கட்ட அனுமதி கோரி, ராமர் பிறப்பிடத்தின் மகந்த் என்று அழைக்கப்பட்ட ரகுபர்தாஸ் வழக்கு தொடுத்தார்.

1886: அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

1870-1923: மசூதி வாயிலில் ராம ஜென்மபூமி என்று கல்வெட்டு வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சர்ச்சை வலுக்கத்தொடங்கியது.

1949 டிசம்பர் 22,23: நள்ளிரவில் ராமர் லட்சுமணர் சிலைகள் கிடைத்ததாக அங்கு வைத்து மக்கள் கூடி வழிபாடு நடத்தினர்.
    
    டிசம்பர் 29: பைசாபாத் கோர்ட்டு, பாபர் மசூதியை சர்ச்சைக்குரிய சொத்தாகவும் முஸ்லீம்கள் மசூதிக்கு செல்ல தடைவிதித்தும் இந்துக்கள் வழிபட பக்க வாயிலை பயன்படுத்திக் கொள்ளவும் உத்தரவிட்டது.

1950 ஜனவரி 16: இந்து மகாசபாவின் உறுப்பினரான கோபால் சிங் விஷாரத் வழக்கு தொடுத்தார். அதில் தடங்கலின்றி வழிபடவும் சிலைகளை அகற்ற தடை கோரியும் தொடரப்பட்டது.

1959: பாபர் மசூதி அல்ல அது கோவில் என்பதால் முழு கட்டமைப்பையும் மாற்றியமைக்க உரிமை கோரி நிர்மோஹி அகாரா வழக்கு தாக்கல் செய்தார்.

1961 டிசம்பர் 18: பாபர் மசூதியை தங்களிடமே ஒப்படைக்க கோரி சன்னி மத்திய வக்பு வாரியம் வழக்கு தொடுத்தது.

1986 பிப்ரவரி: பைசாபாத் கோர்ட்டு உத்தரவின் பேரில் பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதி திறக்கப்பட்டது.

1987: அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. 
விஷாரத் தாக்கல் செய்த வழக்கு-1வது வழக்கு
ராம சந்திர பரமஹன்ஸ் வழக்கு -2வது வழக்கு
நிர்மோஹி அகாரா வழக்கு -3வது வழக்கு
வக்பு வாரியத்தின் வழக்கு -4வது வழக்கு
    
1989 ராம் லல்லா வழக்கின் ஒரு தரப்பு ஆனார். 
        ராம் லல்லாவின் சகா என்ற பெயரில் தியோகி நந்தன் அகர்வால் வழக்கு -5வது வழக்கு
    
1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதில் கர சேவகர்கள் மீதும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமா பாரதி, வினய் கட்டியார், கிரிராஜ் கிஷோர், டால்மியா, சாத்வி ரதம்பரா ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

    டிசம்பர் 16 பாபர் மசூதி இடிக்கப்பட்ட உண்மை நிகழ்வை ஆராய நீதிபதி லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது.

1993 ஜனவரி 7: பிரச்சனைக்குரிய இடத்தை கைப்பற்ற ஜனாதிபதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

2002 ஆகஸ்ட் 1: தொல்பொருள் ஆராய்ச்சி நடத்த இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்புக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

2003 ஆகஸ்டு: அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

2010 செப்டம்பர் 30: சர்ச்சைக்குரிய இடத்தை சன்னி வக்பு வாரியம் , நிர்மோஹி அகாரா, ராம்லல்லா ஆகியவற்றிற்கு சமமாக பிரித்துக் கொடுக்க தீர்ப்பளித்தது.

2011 மே 9: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

2017 -2019: அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீபக் மிஸ்ரா 2018 ல் ஓய்வு பெற்றார்.

2018 அக்டோம்பர் ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

2019 ஜனவரி ரஞ்சன் கோகாய் தலைமையில் வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

    2019 மார்ச் சமரச பேச்சுவார்த்தையில் தீர்வுகாண முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் மற்றும் மூத்த வக்கீல் ராம் பஞ்சு ஆகியோர் தலைமையில் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.

    2019 ஆகஸ்டு சமரச குழுவினால் தீர்வு காண முடியவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    2019 அக்டோபர் 16 ஆகஸ்டு 6ஆம் தேதி முதல் 40 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு முத்தரப்பு எழுத்துப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

2019 நவம்பர் 9: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் (சந்திரசூட், போப்டே, அப்துல் நசீர், அசோக் பூசன்) அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்தது. அதில் 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் எனவும் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வழங்குமாறும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு பல வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த வரலாற்றின் சரித்திர உண்மை காலாகாலத்திற்கும் பேசப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Comments

  1. Good information.i read in hindi translation

    ReplyDelete
  2. Excellent great work keep it up👏🏻👏🏻👏🏻

    ReplyDelete
  3. Excellent great work keep it up👏🏻👏🏻👏🏻

    ReplyDelete
  4. Wow are those statue real?.. They are a little scary

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அறச்சலூரின் பெருமை பேசும் இசைக் கல்வெட்டு ¦ Arachalur ¦ Music Inscription

Kandha Sasti kavasam lyrics | கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

கீழடிக்கு ஓர் இணையடி எம் கொடுமணல் ¦ Kodumanal