கீழடிக்கு ஓர் இணையடி எம் கொடுமணல் ¦ Kodumanal
கொடுமணல் பழமையும் பெருமையும் கரைபுரண்டோடும் செழுமையும் பல்கிப் பெருகிய தமிழகத்தினில் புகழுக்கு ஓர் மணிமகுடமாய் நொய்யல் ஆற்றின் வடகரையில் மண்ணில் புதையுண்ட பண்டைய தமிழனின் வாழ்க்கைப் புதையல் - " கொடுமணல்" ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் உள்ள கொடுமணல் கிராமம், இது நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த தொழில் நகரம். சங்க காலம் என வழங்கப்படும் காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும் . கொடுமணல் சங்க நூலில் (பதிற்றுப்பத்து) " கொடுமணம் " என்று அழைக்கப்பட்டுள்ளது . சான்று-1: (சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்தில் புலவர் அரிசில் கிழார் என்பவரால் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை புகழ்ந்து பாடிய பாடல்) விளக்கம் வேதங்களைச் சொல்லக் கேட்டு அதற்கான விரதங்களை இடைவிடாது கடைபிடித்து வேள்விகளைச் செய்து முடித்த மன்னனே! நுண்ணிய கருமணலைப் போன்ற கீழே தாழ்ந்த கரிய கூந்தலைக் கொண்ட திருமகளாகிய லட்சுமியிலும் சிறந்த உன் மனைவிக்கு கொடுமணம் என்னும் ஊரில் மிகுந்த வேலைப்பாடுகள் கொண...