கோவில் கோபுர கலசமும் இரிடிய மோசடியும் ¦ Temple kalasam, iridium
கோவில் கோபுர கலசமும் இரிடிய மோசடியும் அறிவியலும் ஆன்மீகமும் புணர்ந்த கோவில் கோபுர உச்சியில் பல கதைகளுடன் அரும்பாய் கால் பதித்த கவசம்- கலசம் இதைக்கொண்டு நடத்தப்படும் வேசம் கோபுர கலசம் கோவில் கோபுரத்தின் உச்சியில் வேத மந்திரங்கள் ஓத பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கலசத்தில் உள்ள தானியங்கள் மாற்றி குடமுழுக்கு நடத்தப்படும். இந்நிகழ்வு கற்பகிரகத்தின் ஆற்றலை (சக்தியை) பெருக்க நடத்தப்படக் கூடிய அறிவியல் கலந்த ஆன்மீகமாக கருதப்படுகிறது. "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" அக்காலத்தில் கோவில்களை சுற்றியே வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நேர்மறை ஆற்றல் கொண்டதாக விளங்கும் கோவில்கள் அதன் உச்சியில் உள்ள கலசங்கள் நேர்மறை ஆற்றலை பூஜ்ஜிக்கப்படும் கற்பகிரத்தில் உள்ள சாமி சிலைகளில் இருந்து பெற்று சுற்றியுள்ள மக்களுக்கு நன்மை அளிப்பதாக நம்பப்படுகிறது. கலசங்கள் ஒரு மின்கடத்தியாக செயல்பட்டு சுற்றியுள்ள இடங்களை இடிமின்னலில் இருந்து காக்கும் வல...