Posts

Showing posts from August, 2020

கோவில் கோபுர கலசமும் இரிடிய மோசடியும் ¦ Temple kalasam, iridium

Image
கோவில் கோபுர கலசமும் இரிடிய மோசடியும் அறிவியலும் ஆன்மீகமும் புணர்ந்த  கோவில் கோபுர உச்சியில் பல கதைகளுடன் அரும்பாய் கால்  பதித்த கவசம்- கலசம் இதைக்கொண்டு நடத்தப்படும் வேசம்   கோபுர   கலசம்           கோவில் கோபுரத்தின் உச்சியில் வேத மந்திரங்கள் ஓத பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கலசத்தில் உள்ள தானியங்கள் மாற்றி குடமுழுக்கு நடத்தப்படும். இந்நிகழ்வு கற்பகிரகத்தின் ஆற்றலை (சக்தியை) பெருக்க நடத்தப்படக் கூடிய அறிவியல் கலந்த ஆன்மீகமாக கருதப்படுகிறது. "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்"           அக்காலத்தில் கோவில்களை சுற்றியே வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நேர்மறை ஆற்றல் கொண்டதாக விளங்கும் கோவில்கள் அதன் உச்சியில் உள்ள கலசங்கள் நேர்மறை ஆற்றலை பூஜ்ஜிக்கப்படும் கற்பகிரத்தில் உள்ள சாமி சிலைகளில் இருந்து பெற்று சுற்றியுள்ள மக்களுக்கு நன்மை அளிப்பதாக நம்பப்படுகிறது.            கலசங்கள் ஒரு மின்கடத்தியாக செயல்பட்டு சுற்றியுள்ள இடங்களை இடிமின்னலில் இருந்து காக்கும் வல...

Create Virtual Visiting Card on Google

Image
  Create Virtual Visiting Card (People card) on Google      Google newly announced that users can Create Visiting card on google (People Card). On Tuesday, this feature is introduced in India. It will help people to connect with others and provide a platform to show your skills.      Sample Virtual Visiting Card,   How to create People Card Step-1:         Open Browser (Google Chrome, Mozilla Firefox, Opera and any browser) on your Mobile or PC Step-2:          Search "add me to search" in google search box     Step-3:               In the first search result "Add yourself to google search" Click "Get started"    Step-4:          Create your public card. For business purpose click "here" to create business card     Step-5:   ...

அறச்சலூரின் பெருமை பேசும் இசைக் கல்வெட்டு ¦ Arachalur ¦ Music Inscription

Image
அறச்சலூர் இசைக் கல்வெட்டு தொண்மையும் நிகரில்லா பெருமையும் தன்னகத்தே கொண்டு இன்றளவும்  முதிர்ச்சியடையா இளமையுடன் பல தலைமுறை தொட்டு வாழும் தமிழுக்கு இசை விருந்து படைத்து வளர்த்த  அறம் சார்ந்த ஊர் அறச்சலூர். அறச்சலூர்      ஈரோடு மாவட்டத்தில் இருந்து காங்கேயம் செல்லும் பிரதான சாலையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பசுமை மாறா இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் அறச்சலூர். இவ்வூரில் குடிகொண்டுள்ள அறச்சாலை அம்மன் பெயரில் அறச்சாலையூர் (அறம்+ சாலை+ ஊர்) என்று அழைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் அறச்சாலையூர் மறுவி அறச்சலூர் என்று பெயர் மாற்றியழைக்கப்பட்டது. தற்போது அதுவே பிழையாக அரச்சலூர் ஆனது.   சமணர் படுகை      அறச்சலூரில் உள்ள நாகமலை என்னும்  மலைத்தொடரின் உச்சியில் முருகனுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலைத்தொடரின் வடக்குச் சரிவில் கீழ்புறமாக சுமார் ஒன்றறை கிலோ மீட்டர் தொலைவில் ஆண்டிப்பாறை பகுதியில் பாண்டியர் குழி என்னும் சரிவில் சுமாராக 150 அடி உயரத்தில் இயற்கையாய் அமையப்பெற்ற குகையில் இசைக்கல்வெட்டு பொரிக்கப்பட்ட...

சீனாவின் புதிய தயாரிப்பு வெளியீடு டிக்-போர்னே ¦ Tick Virus Made in China

Image
சீனாவின் புதிய வெளியீடு டிக் வைரஸ்   தொழில்நுட்பம் கண்டு ஏற்றம் பெற்ற உலகில் ஒரு கொரானா எனும் உயிர்கொல்லி கிருமி   படுத்தும்பாடு போதாதென்று சீனா அறிமுகப்படுத்தும்  அரியதோர் கண்டுபிடிப்பு டிக்-போர்னே Made in China          கொரோனாவில் இருந்து எப்போது மீளப்போகிரோம் என்று புலம்பிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் சீனா புதிதாக "டிக்-போர்னே" என்ற மற்றொரு வைரஸை அறிமுகப்படுத்துயுள்ளது.             கொரோனாவிற்கான எதிர்ப்பு மருந்துகள் உலக நாடுகளில் வெவ்வேறு படிநிலைகளில் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில் புதிதாக பரவும் இத்தகைய வைரஸ் நாட்டு மக்களிடத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.             கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 37 பேருக்கும், அன்ஹூய் மாகாணத்தில் 23 பேருக்கும் மொத்தமாக 60 பேருக்கு இந்த வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர் என சீனாவின் அதிகாரபூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்ட 60 பேரில்...

அயோத்தியில் உதித்த பாலகன் ராமன் ¦ Shri Ram Temple in Ayodhya

Image
அயோத்தியில் பாலகன் ராமன் நீண்ட நெடு பயணமாய்  இழந்த  உன் மனை(வி)யை பெரும் போரை  எதிர்கொண்டு மீட்டாய் அன்று!  அதே ராம ஜென்ம பூமியில் தீமையை அழித்து  நல்லருள்  பெருக  கோலூன்றி நின்றாய் இன்று!        நடந்து முடிந்த மங்களகரமான சார்வரி ஆண்டு ஆடி மாதம் 21-ஆம் நாள் (05-08-2020)  துதியை திதியில் சுபயோக சுபதினத்தில் ராமஜென்ம பூமியான உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் மேளதாளங்கள் விண்ணைப் பிழக்க, மந்திர உச்சாடனங்கள் அயோத்தி எங்கும் ஒலிக்க அடிக்கல் நாட்டு விழா இந்துக்களின் கடவுளாம் ராமனுக்கு நடத்தப்பட்டது.       இதற்காக 2000 ஆலயங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதமண், 100 நதிகளில் இருந்து கலசங்களில் எடுத்துவரப்பட்ட புனிதநீர் கொண்டு பூஜிக்கப்பட்டது. பாரதப் பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட கல் நிறுவி பூமி பூஜை பிற்பகல் 12:30 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது. கட்டுமானம்      ராமருக்கு கட்டவிருக்கும் கோவில் 67 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமாக அ...